bcctext

A dedicated service with the intention of
Building up a students society with a balanced
communicative skills through modern technology

பதுரியா அபிவிருத்தி நிதியத்தின் பெற்றார்களுக்கான ஒன்று கூடல்.

பதுரியா மத்திய கல்லூரிக்குத் தேவையான பௌதிக வளங்களைப் பெற்றுக் கொள்வதற்காக தொழில் அதிபர் அல் ஹாஜ் வதுத் அவர்களின் தலைமையில் கிருங்கதெனிய பிரதேச தனவந்தர்கள், புத்தி ஜீவிகள், பாடசாலை அபிவிருத்திச் சங்க மற்றும் பழைய மாணவர் சங்க உறுப்பினர்களை உள்ளடக்கியதாக பதூரியா அபிவிருத்தி நிதியம் ( Baduriya Development Trust - BDT) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு செயற்பட்டு வருகின்றது.

தற்போது இந்த அமைப்பு Master Plan ஒன்றினை அமைத்து இப்பாடசாலையின் தேவைகளான வகுப்பறைகள், வாசிகசாலை, கேட்போர் கூடம், மாணவர் ஆசிரியர் விடுதிகள், நீச்சல் தடாகம், விளையாட்டு மைதானம், சுற்று மதில் என ஒரு முன்னணிப்பாடசாலைக்குத் தேவையான அனைத்து வளங்களையும் பெற்றுக் கொள்வதற்கான திட்டங்களை தீட்டி செயற்பட்டு வருகின்றது.

இதன் ஆரம்பகட்டமாக சுமார் 4 கோடி ரூபாய்கள் செலவில் ' ப ' வடிவிலான மூன்று மாடிக் கட்டிடத் தொகுதியொன்றை பதுரியா அபிவிருத்தி நிதியம் நிர்மாணிக்க முன்வந்துள்ளது. இதன் முதற்கட்ட வேலைகள் 1 கோடியே பத்து இலட்சம் ரூபாய்கள் செலவில் எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் ஆரம்பமாகவுள்ளன. இதன் பணிகள் பூர்த்தியடைந்ததன் பின்னரே ஏனைய பகுதிகளை பூர்த்தி செய்வதற்கான நிதியினைப் பெற்றுக் கொள்வதற்காக தனவந்தர்கள் மற்றும் நலன் விரும்பிகளின் ஒத்துழைப்பினை நாட இருப்பதாக பதுரியா அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் அல்ஹாஜ் வதுத் அவர்கள் தெரிவிக்கின்றார்.

பதுரியா அபிவிருத்தி நிதியத்தினை அறிமுகப்படுத்துவதற்கான பெற்றார்களுக்கான ஒன்று கூடல் 30ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை 9.00 மணியிற்கு பாடசாலையில் நடைபெற்றது. சுமார் 2000 பெற்றார்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் அஷ்ஷெய்க் ஆ.து.ஆ மன்சூர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.

பதுரியா அபிவிருத்தி நிதியத்தின் (BDT) இணைய வடிவமைப்பு வேலைகள் தற்போது நடைபெறுகின்றன. மாவனல்லை பதுரியாவை கட்டியெழுப்பும் பணியில் வெளிநாடுகளில் தொழில் புரியும் அல்லது வசித்து வரும் கிருங்கதெனிய ஜமாஅத்தினர், பழைய மாணவர்கள் அனைவரினதும் ஒத்துழைப்பையும் உதவிகளையும் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகளை BDT தற்போது மேற்கொண்டு வருகின்றது. அதற்காக அவர்களின் தகவல்களை திரட்டுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனவே அருகில் தரப்பட்டுள்ள படிவத்தை நிரப்பி உங்கள் தகவல்களை DATA BANK இற்கு வழங்குங்கள்

பதுரியா அபிவிருத்தி நிதியத்தின் எதிர்காலப்பணிகளில் ஒத்துழைக்க விரும்புபவர்கள், வெளிநாடுகளில் தொழில் புரியும் கிருங்கதெனிய ஜமாஅத்தைச் சேர்ந்தவர்கள், பதுரியாவின் பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் கீழ்வரும் படிவத்தை நிரப்பி அனுப்பவும்

foxyform
BADURIYA DEVELOPMENT TRUST
Patron Mr. M.T.M Nistar
  Principal : Baduriya Central College
Senior Advisors Al Haj M.C.M Rahmathulla
  Chairman : Wijitha Group PVT Ltd
  Mr. M.R.M Risvi
  Chartered Accountant
  Mr. M. Kamil
  Regional Manager
  Mr. M.R.M Salman
  Management Accountant
President Al Haj M.M.M Wadood
  Propreitor: Classic Imports
Vice Presidents  
V.P Operations Al Haj Yasir Arafth
  Propreitor: Jeewa Industries
V.P Administration Al Haj A.S.A Azhar B.Sc(Eng) MICH
  Director: RDA, Central Province
V.P Finance Mr. M.A.M Azam
  Manager: Amana Bank
Gen. Secretary Al Haj S. Badurdeen B.Sc(Env)
Joint Secretary Al Haj M.M Nilar
  Secretary: School Deve. Committee
Finance Sec. Mr. M.R.M Suhail
  Amana Bank
Propaganda Sec. Mr. M.H.M Rifan B.Sc.(Eng)
  Director : MCCE Educational Institute
Treasurer Mr. M.A.M Farhan
  Uwaise Brothers
Complanants A. Mohammed Iqbal LL.B
  Attorney-at-Law