bcctext

A dedicated service with the intention of
Building up a students society with a balanced
communicative skills through modern technology

பதுரியா மத்திய கல்லூரியிற்குத் தேவையான பௌதிக வளங்களைப் பெற்றுக் கொடுப்பதற்காக கிருங்கதெனிய பிரதேச தனவந்தர்கள், புத்தி ஜீவிகள், பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள பதுரிய அபிவிருத்தி நிதியத்தின் அங்கத்தவர்கள் கடந்த 05.06.2013 ஆம் திகதி பாடசாலைக்கு விஜயம் செய்து பாடசாலையின் தேவைகளையும் குறைநிறைகளையும் கேட்டறிந்தனர். பதுரியா அபிவிருத்தி நிதியம் பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர்கள் சங்கம் என்பவற்றோடு இணைந்து நீண்டகால திட்ட அடிப்படையில் Master Plan ஒன்றினை அமைத்து முன்னணிப்பாடசாலையொன்றிற்குத் தேவையான அனைத்து வளங்களையும் பதுரியா மத்திய கல்லூரிக்கு பெற்றுக் கொடுப்பதற்கான ஒரு முயற்சியில் இறங்கியுள்ளது. இதன் முதற்கட்டமாக பாடசாலையின் தேவைகளையும் குறைகளையும் கண்டறிவதற்காகவும் Master Plan சம்பந்தமான விடயங்களை கல்ந்துறையாடுவதற்காகவும் பதுரியா அபிவிருத்தி நிதிய அங்கத்தவர்கள் குறித்த தினம் பாடசாலைக்கு சமுகமளித்திருந்தனர். அவர்களோடு Architect திருவாளர் இசுரு அவர்களும் சமுகமளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.