bcctext

 

க.பொ.த. (உயர் தர) வணிகப் பிரிவு மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி


பதுரியா மத்திய கல்லூரி வணிகக் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கல்வி வழிகாட்டல் மற்றும் ஆலோசனை நிகழ்ச்சி கடந்த 2014 மே மாதம் 13 ஆந் திகதி மு.ப. 7.45 மணி முதல் பி.ப. 1.30 மணி வரை பாடசாலை சுமையா மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி கௌர அதிபர் M.T.M. நிஸ்தார் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், முதலில் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்று வரும் மாணவர்களினால் பெறுபேறுகளை அதிகரித்துக் கொள்வது எவ்வாறு என்ற தலைப்பில் கலந்துரையாடப்பட்டது. உப அதிபர் M.S.S. நஸீஹா மற்றும் பதுரியா மத்திய கல்லூரி வணிகக் கழக ஆசிரியர்களான ஜனாப் M.A.M ரிஸ்வான், திருமதி M.S.S. ஸரீனா, திருமதி M.S.U.S. ஹிதாயா, திருமதி M.Z.N. மர்ழியா, திருமதி S.B.M ரியாஸ் திருமதி மாஷா ரூபசிங்க மற்றும் திருமதி M.H். ரோஷன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

வளவாளராக கொழும்பு ஸாஹிராக் கல்லூரி வழிகாட்டல் ஆலோசகர் M.J.M. சனீர் அவர்கள் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்ச்சியானது பல்வேறு செயற்பாட்டு ரீதியான விடயங்கள் உபகரணங்கள் மூலம் விளக்கப்பட்டது. ஒரு மாணவனின் இலக்குகள் காணப்படுவதன் முக்கியத்துவத்தையும், அவ்விளக்குகளை அடைந்து கொள்ளத் தேவையான கடின உழைப்பு, தொடர்ச்சியான முயற்சி போன்றவற்றை விளக்கினார். ஒரு மாணவனின் மறதி நிலைகள், அதற்கான காரணங்கள், அதனை எவ்வாறு நிவர்த்தி செய்து பரீட்சையை எதிர்நோக்கும் மாணவருக்கு அறிவுரைகள், பரீட்சைக்குப் பின்னதான செயற்பாடுகளையும் விளக்கி அதில் மாணவர்கள் எதனை தெரிவு செய்ய வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிகள் பி.ப. 1.30 மணியளவில் துஆவுடன் நிறைவு பெற்றது.

updated on 02.06.2014
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 DSCF7122 DSCF7124 DSCF7125 DSCF7126 DSCF7127 DSCF7128 DSCF7130 DSCF7133 DSCF7134 DSCF7136 DSCF7137 DSCF7139 DSCF7141 DSCF7142 DSCF7143 DSCF7144 DSCF7145 DSCF7146 DSCF7148 DSCF7149 DSCF7150 DSCF7151 DSCF7152 DSCF7153 DSCF7154 DSCF7155 DSCF7156